பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைந.ை #73 பின்னிவிட்ட சாட்டையைப் போல் துவண்டு துவண்டு திமிற, மாடத்தி முற்றத்திலுள்ள கற்குழியில் நெல்லையிட்டு உலக்கை கொண்டு குத்திக்கொண்டிருந்தாள். இரண்டு கையும் மாறிமாறி நெல்லைக் குத்த பாதத்தால் குழியை விட்டு வெளிவரும் நெல்மணியை ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தாள். - வீராசாமியைக் கண்டதும் குத்துவதை நிறுத்தி விட்டு உலக்கையை மார் பின் மேல் சாத்தியவாறே, என்னு கொளுத்தப் பிள்ளே, கோயிலுக்குப் போவெலெ? இன்னிக்கு உங்க வில்லு தானே?’ என்று கேட்டாள். "ஆமா, மதினி, எல்லாம் நம்ப சொதை தான். அது சரி. அண்ணுச்சியை எங்கே? வெளியே போயிருக்காகளா?” என்று கேட்டான் வீராசாமி. 'நல்லாத்தான் கேக்கிய? கோயில்லே கொடையும் நாளுமா வீட்டிலியா இருப்பாக. அதுவும் இன்னைக்கி ஊட்டுப் போட்டுத் தார நாளு. கோயிலுக்குப் போற தாவக் தான் சொல்லிட்டுப் போளுக" என்று சொல்லிவிட்டு, மாடத்தியம்மா உலக்கையைப் பிடித்தாள். "சரிதான். கோயிலுக்குத் தான் போயிருப்பாக, நானுந்தான் போகனும், வரட்டுமா?’ என்று கூறிவிட்டு நடையிறங்கினன், வீராசாமி. இது ஆனைத்தி கதையின் ஆரம்பத்தில் வருவது. உடனடியாகவே, வசன நடையின் வனப்பையும் வலிமையை யும் காட்டும் முறையில் ரகுநாதன் எழுதியிருக்கிரு.ர். "கருப்பன் து ைற சுடுகாட்டுப் பிராந்தியம். அந்தப் பிராந்தியம் முழுவதும் ஒரே பனங்காடு. ஆற்றங்கரையை ஒட்டிப்பிடித்தாற் போல் உயரமாக வளர்ந்து, கரையில் வேரோடி நிற்கும் மருத மரங்கன்