பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைந.ை işi எல்லாம் செப்புப்போல் அடைத்து பந்தோபஸ்து செய்து கொண்டு கட்டாந்தரை நாற்சுவர்கள், மேற்கூரை-இப்படி யொரு காற்று பதமாக்கப்பட்ட பெட்டகத்திற்குள் வசதியாக உட்கார்த்து கொண்டு முழுக்க முழுக்கத் தூய்மை சொட்டச் சொட்டும் கணகம்பீரமான ஒரு படாடோப நடையில் ஒரு காப்பியம் நெய்தெடுத்து விடுவது என்பது எப்படிப் பார்த்தாலும் அப்படியொன்றும் சிரமமான காரியமில்லை என்பதுதான் இவ்விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயம்: நான் கையான எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனித சமூகத்தின் பேச்சிலும் சிந்தனைகளிலும் இருக்கும் தனித் தன்மையைச் செளகரியமாக உதாசீனம் பண்ணிவிட்டுபலிகொடுத்து விட்டு, நான் ஒரு மனிதாபிமானி. மொழி அபிமானி என்றெல்லாம் வீம்பாய் சுயப்பிரதாபம் அடித்துக் கொண்டால் அது வெறும் கேலிக் கூத்தாகி விடாதா? இந்நாவலில் வரும் மக்கள் சமூகத்தினர்களிடம் இருக்கும் பிராந்தியவாடையிலிருந்து இவர்கள் மலேயாளிகள் என்று பேதம் காட்டி தீண்டாமை கற்பித்துப் பிரித்து வைத்து விடுபவர்களுக்கு, தனித்தன்மை கொண்ட வெவ்வேறு வார்த்தை அமைப்புகளும், உச்சரிப்பு முறை களும் கொண்ட செட்டிநாடு, நெல்லை, தஞ்சை, கொங்கு தாடு, இலங்கை, மலேசியா இங்கெல்லாம் வாழும் தமிழர்களைப் போலத்தான், குமரி மாவட்டத்திலும் கேரள மாகாணத்தில் பல இடங்களிலும் வாழும் இவர்களும் அசல் தமிழர்கள் தான் என்று அறிவிக்கக் கூடத்தான் இந்த நடை. இவர்களின் தமிழில் மலேயாளத்தின் பாதிப்பு அறவே இல்லை என்று நான் வாதிட வரவில்லை. ஆனல் முதலில் மலையாளமோ என்று தோன்றினுலும் உண்மையில் எலயாளத்திலோ, தூய தமிழிலோ இன்று பழக்கத்தில்