உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

197

“ஒரு வண்டி மணலுக்கு பத்து குட்டை அளவு தான் வரும். நல்லா வெள்ளம் வடிஞ்சு ஒணங்கிய மணலுதரலாம். வெலை அது தான். கொறையாது. கேக்காண்டாம்” (கேட்க வேண்டாம்) என்பான்.

‘ஒரு சாற்ற மழை வந்தாகூடெ எல்லா மண்ணும் ஒலிச்ச (ஒழுகி) ஆற்றிலேயே எறங்கீரும்.’

‘வெயில் மேலே ஏறிவந்தாச்சு கோரி (வாரி) இடப்பா சீக்கிரம், பாதி வள்ளம் மண்ணு கூட ஆவல்லியே. இல்லாட்டா தூம்பாவை இங்கே கொண்டாருங்கோ. நான் காணிச்சு தாரேன்.’

‘இதுக்கொரு அறும்பாதம் வருத்தாமே (முடிவு தேடாமல்) ஒண்ணும் காணலியே கேக்கலியேண்னு இருந்தா அது ஓட்டும் நல்லதல்ல. முப்பன் இந்த ஒரு விஷயத்திலேயும் இவ்வளவு மோசமாயிட்டு நடந்திர வேண்டாமாயிருந்தது. இப்போ இந்த கடவிலுள்ள (துறையில் உள்ள), இக்கண்ட ஜனங்கள் எல்லாம் கூடிட்டும் முப்பனுக்கு ஒரு அனக்கவுமில்லே (அசைவுமில்லை).’

இப்படி நாவல் முழுவதும் வட்டாரத் தமிழ் கலந்து வந்துள்ளது. மாதவன் இந்த ரக உரைநடை எழுதுவதில்தான் தேர்ந்தவர் என்று எண்ண வேண்டியதில்லை. அழகிய, இனிய நடையில் இடவர்ணனை, பாத்திர வர்ணனை முதலியவற்றை எழுதக் கூடியவர் என்பதற்கு அவருடைய ‘புனலும் மணலும்’ நாவலே சான்று கூறும்.

அதில் ஒரு இடம், தாமோதரன் என்பவனைப் பற்றியது நல்ல உதாரணமாகும்.

“காலம் தான் எப்படியெல்லாம் வளர்ந்து உருமாறி வந்து விட்டது. ஆனாலும், தாமோதரன் மட்டும் அதே விசுவாச மனம் கொண்டவனாக அப்படியே இருக்கிறான். இந்தக் காலத்தில் இப்படியொருவனா என்று வியப்பாகத் தான் இருக்கிறது.