பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தெரிகிறது. பார்வையின் காட்சி எனக்கு பசியாக கணிகிறது. ஆளுல் எல்லாம் எனது அறிவின் முன் புல்லாக, முளேத்த இதழ் முளைத்தபடி விரித்த கைகள் விரித்தபடி, மணத்த மணம் மனத்தபடி, அழிக்க முடியாத நிழல் போல சாரமற்றதாகி விடுகின்றன." (தியானம் கதையில்) இப்படி அவர் பின்னும் சொற்கோலங்கள் ரசனைக்கு நல் விருந்து ஆகும். * - சாதாரண விஷயங்களைக் கூட தனித் தன்மையோடு மாதவன் சொல்கிறபோது, அவருடைய உரை நடை பாராட்டப்பட வேண்டிய அழகைப் பெறுகிறது. உதாரணம்: "அடக்கம் அங்கே அமைதியாக வீற்றிருந்தது; அல்லது, அழகு அங்கே அடக்கமாகக் கொலுவிருந்தது.”

  • மங்கல் ஒளிக்கு குடை பிடித்த மாவின் கிளைகள் இருட்டிற்கு கறுப்புச் சட்டை இட்டிருந்தது.”

"நான் மிருகத்தின் தீனி வேளை போல இருட்டானவன் ‘என் மவுனம் அனைத்து விட்ட இருட்டாக வீடெங்கும் பரவியிருந்தது.” "இருளான பிராகாரத்திற்கு அந்த ஒளி விளக்குகளின் ஒளி சத்தியத்தின் பலவீனம் போல எட்டமாட்டேன் என்கிறது.” இவ்வாறு பல்வேறு தன்மைகளிலும் உரை தடையை கையாள்கிற மாதவனின் எழுத்தில் அவருடைய கலைத் கேர்ச்சியும், அனுபவ ஆழமும், கசிய நோக்கும் நன்கு பிரதிபலிக்கின்றன.