உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

209

எண்ணெய் தடவியிருந்தான். அம்மன் நகைகள் அணிந்து புதுசணிந்து பூவணிந்து உற்சாகமாக நின்றாள்.’

ஒரு பெரிய நகரின் மிக நாகரிகமான சூழ்நிலையை சுஜாதா சித்திரிக்கும் விதம் வித்தியாசமானது:

“அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாப்பிட்டார்கள். சல்லாபித்தார்கள். எனக்கு எதிரே நான்கு இளைஞர்கள் சோம்பேறித்தனமாக சாக்ஸபோன் பிரதானமாக, ஒரு மெட்டை வழிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.

நடுவே இடம் காலியாக இருந்தது. அந்த இளைஞர்கள், சற்று நேரத்தில் உருட்டப் போகும் ‘ர்ராக நடனப் பாட்டுக்கு அவர்கள் குலுங்கி அதிர்ந்து மேக்கப் கலையாத ஆச்சரியத்தில் ஆடப் போகிறார்கள். அதற்கான இடம்.

கண்ணாடிக் கதவுகள் திறந்து மேலும் அழகான பெண்களும் அவர்கள் அடிமைகளும் நுழைந்து சிரித்து நடந்து அடைந்து உட்கார்ந்தார்கள்.

அவர்கன் எல்லோரும் வெரோணிக்கா எப்பொழுது வரோனிக்கா என்று காத்திருந்தார்கள். அந்த இளைஞர்கள் கித்தார்களை முறுக்கினார்கள். டிரம்களை ஆசைதீர உடைத்தார்கள். சலங்கை சத்தங்களும் பஞ்சு வைத்து வில்லடிக்கும் சப்தங்களும் 3/3 துடிப்பில் ஒன், டூ, த்ரி சற்று விலகி ஒன் டூ என்ற பாஸ்ஸ நோவாவில் லத்தீன் அமெரிக்காவின் சூடு தரும் லயத்துடன் கவர்ச்சிகரமாக வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

தைரியமுள்ளவர்கள் சிலர் தங்கள் லஜ்ஜைகளை நாற்காலிகளில் விட்டுவிட்டு நடுவில் வந்து ஆடினார்கள். இளைஞர்களின் வாத்திய சங்கீதத்தில் துடிப்பு அதிகரித்தது. ‘டர்ர்ர்ர் ரய்ஞ்!’ என்று அக்கார்டியனைக் கீறினான்; அந்தத்