பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿2 பாரதிக்குப் பிஜ் அவர் அதிகம் அறிந்து வைத்திருப்பதை, வாசகர்களை *இம்ப்ரஸ் பண்ணுவதற்காக திடீர் திடீரென்று உதிர்த்துச் செல்வதற்கு இதுவும் உதாரணம் ஆகும். மேலும் இரண்டு குறிப்பிடலாம்: - "இளமையுடன் சேர்ந்து ஒர் உத்சாக ராகம்போல இருந்தாள். கல்யாணராமனுக்கு பீத்தோவனின் விடிஃபனி ஞாபகம் வந்தது. டி மேஜர் ஒப்பஸ் 61.” "சட்டை அணியாமல் மார்பில் மொச மொச என்று வெளுப்பு மயிராக ரஷ்யக் கரடிக் குட்டிபோல் இருந்தார். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு. காப்ளிகம் போல மூக்கு. (மிளகாய் பழம் போல மூக்கு என்று அவரே வேருெரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிரு.ர்.) உணர்ச்சிப் பரபரப்பை எடுத்துச் சொல்ல சுஜாதா நயமான பல உத்திகளைக் கையாள்கிருர்

“அவன் இருதயம் பயம் பயம் பயம் என்று பம்ப் அடித்துக் கொண்டிருந்தது.” 'வியர்வை உடல் பூராக் கொப்பளிக்க, சுவாசப் பைகள் ஒவர் டைப் செய்ய, கிராமத்து அத்தனைக் காற்றையும் வாங்கி, சுவாசித்து, இரைத்து, வியர்த்து, பயந்து ஓடி, வீதி மத்தியில் நின்று கத்தினன்.” "அவள் சட்டை மார்பைச் சரியாக மூடாதது வசந்தின் ரத்த அழுத்தத்தை மிகவும் சோதிக்கப் போகிறது.” 'கொடியிலிருந்து மாற்று உடைகளைக் கவர்ந்து அணிவதற்குள் அவள் உடலின் வடிவங்களின் சலனத்தின் நிஜம் அவனத் தாக்கியது. "மிக என்ற சொல்லை சுஜாதா அதிகம் உபயோகிக் கிருச்- - -