இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
214
பாரதிக்குப் பின்
உதாரணம்: “நான் பின்தொடர்ந்தேன். தொடர்ந்த அவள் ‘பின்’ அழகாக ஒரு இத்தாலிய நடிகையின் ‘பின்’னை ஞாபகப்படுத்தியது.”
“வ்வாட் என்றார். அந்த ‘வாட்’டில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நிச்சயம் பாட்டரி வீக்காகி இருக்கும். கம்பி வழியாகக் காதில் சுட்ட சரியான கிலோவாட்.”
சுஜாதாவின் மற்றொரு ‘ஸ்பெஷாலிட்டி’ எழுதிச் செல்லும்போதே குதர்க்கம் அல்லது குறும்புத்தனம் அல்லது ‘சர்க்கஸ் வேலை’ பண்ணுவது.
எழுந்து
நி
ல்
லு
ங்
க
ள்.
றி
ஏ
இ
ற
ங்
கி
னா
ன்.
‘விமானம் நிலையத்திலிருந்து கிளம்பி 1500 அடியில் பறந்து, விவசாயிகளை நோக்கி
வி
ர்
ர்
ர்
ர்
ர்
ர்
டு
ம்
என்று இறங்கி’—