பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 57 களையும் பொருள்களையுந் தூயவாக்கி வகுத்தலே நூல்யாக்கு முறையென்பதனைச் சிறிதும்ஆய்ந்து பாராத இஞ்ஞான்றைக் கதைநூற்காரர்கள், வடசொல்லும் ஆங்கிலச் சொல்லுங் கொச்சைத் தமிழ்ச் சொல்லும் விரவிய மிகச் சீர்கெட்ட நடையில் அவை தம்மை வரைந்து, நூன் மாட்சியினைப் பாழ்படுத்துகின்றனர். தாளேற நானேற அறிவுஞ் செயலுஞ் சீர்திருந்தி வளர்தற்கு ஏற்ற உயர்ந்த முறையில் எழுதப்படுங் கதை நூல்களையே பயிலல் வேண்டுமல்லால், இத்தகைய வழுஉக் கதைகளைப் பயிலல் நன்ருகாது” என்று அடிகளார் அறிவித்துள்ளார். 'தனித் தமிழ் சுவை மிகுந்து வருமாறு எழுதிய அடிகள் நீளம் நீளமான வாக்கியங்களை அமைப்பதிலும் ஆர்வம் காட்டினர். ஒருவாக்கியம் ஒரு பெரிய பாசா ஆகவும் வரும்; சில சமயம் ஒரு பக்க அளவுக்குக்கூட வளரும். வாக்கியம் இயல்பாக முடியக் கூடிய இடத்தில் அதனை முடிய விடாது ‘ஸ்ெமிக் கோலன்” (ஆரைப் புள்ளி)களை உபயோகித்து "கூட்ஸ் வண்டி'த் தொடர் மாதிரி வெகு நீண்டதாகப் பண்ணுவதில் அவர் மகிழ்ச்சி கண்டார் என்றே தோன்று கிறது. ஒரு உதாரணம் பாருங்கள்: 'வரலாற்று நூலாசிரியற்கும் நல்விசைப் புலவற்கும் உள்ள வேறுபாட்டை விளங்க அறிதற்கு, இஞ்ஞான்று எடுக்கப்படும் நிழலுருப் படத்தையும் கைவல் ஒவியளுல் வரையப்படும் விழுமிய ஓவியத்தையும் உற்று நோக்கு மின்கள் கருவிகொண்டு எடுக்கப்படும் நிழலுரு எவ்விடத்தில் எக்காலத்தில் எவ்வெப் பொருள்கன் எவ்வெவ்வாறு இருந்தனவோ அவ்வவ்வாறே யமையும்; அதன்கண் அழகுள் ளனவும் அழகில்லனவும் ஆகிய எல்லாந் தாந்தாம் அமைக்கப்பட்ட படியே தோன்றுமல்லது, தமதியல்பில் ಅಣ' குறைந்தாயினுந்தோன்மு; அந்நிழலுருவின் 嶺刻鯊""