16
பாரதிதாசன்
ஓட்டமெடுக்கும். தேர்தல் முடிந்தவுடன் மக்கள் பல நாட்கள் கவிஞரின் தேர்தல் இலக்கியத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப் பார்கள்.” என்று சர்வோதயத் தலைவரும் காந்தியவாதியுமான எஸ்.ஆர். சுப்பிரமணியம் தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மாசித்திங்களில் வரும் மகவிழா புதுவையில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும். அக்கம் பக்கத்திலுள்ள நூறு சாமிகள் கடலில் மகமுழுக்காடுவதற்குப் புதுவைக் கடற்கரைக்கு வரும். மயிலத்திலிருந்து வரும் முருகப் பெருமானும், செஞ்சியிலிருந்து வரும் அரங்க நாத சாமியும் விழாவை அணிசெய்யும் முக்கியக் கடவுளர்கள்.
பாரதியைப் பார்ப்பதற்கு முன்பே கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர் சுப்புரத்தினம். இவர் இளமையில் எழுதிய 'மயிலம் சுப்பிரமணியர் துதியமுது' வண்ண இசைப்பாடல்களால் அமைந்த சிற்றிலக்கியம். இசையிலும் அமைப்பிலும் சந்த நயத்திலும் திருப்புகழுக் கொப்பானவை அதில் உள்ள பாடல்கள்.
ஒருமுறை தேர்தல் நெருங்கும் நேரம், மகவிழா வந்தது. மயிலம் முருகன் புதுவையில் ஊர்வலம் வரும்போது, தெருவெல்லாம் பந்தல் போட்டு அலங்கரிப்பது வழக்கம். அவ்வாண்டு அலங்காரம் சுப்புரத்தினத்தின் தமிழ்வாளின் வீரவீச்சுக்கள் தாம்.
அநியாய ஆட்சியை அழிக்கவா முருகா!
பட்டுத் துணியால் பாழாகும் புதுவையை
நாட்டுத் துணியால் நலம்பெறச் செய்யவா!
- * *
காசியும் போலிசும் கவர்னரும் கையிலென்
றோதித் தேமாற்ற உன்னுவர் அழிக்கவா
மாம்பராய் வந்தபின் மக்களை வெருட்டும்
சோம்பற் குழுவினைத் தொலைக்க வேலாவா
- * *
தேர்தலின் பெயரால் திருடிப் பிழைக்கும்
பேர்களை ஒழிக்கப் பெருமான் வருக!
தலைவராவதற்குச் சனங்களின் தயவையே