உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வியும் ஆசிரியப் பணியும்

17

எதிர்பார்த் திருப்போர் எழிலுறச் செய்யவா!
மாநிலம் புகழும் மகாத்மா வாழவா
பொதுவுக் குழைக்கும் புனிதர்கள் வாழவா!

அந்த நாளில் புதுவை அரசியல் அமைப்பில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று இரண்டு வகை வாக்குச் சீட்டுகள் உண்டு. பிரெஞ்சுக்காரர்களும், தங்களைப் பிரெஞ்சுக்காரர் என்று பதிவு செய்து கொண்ட கலப்பினத்தவரும் முதல் வகுப்பு வாக்காளர்கள். பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதியில் பிறந்து 21 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் இரண்டாம் வகுப்பு வாக்காளர்கள். இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்தார் சுப்புரத்தினம்.

பல்லவி

கூவாயோ கருங்குயிலே
யாரும் ஒன்றென்று (கூவாயோ)

அனுபல்லவி


ஏவலர் இந்தியர்
இரண்டாம் தொகுதியென்றார்
அக்குறை நீங்கிற்றென்றே
இனிதாய் நன்றே (கூவாயோ)

தொகையறா


ஒரு குடைக்கீழ் நின்ற
வருள் சிலருக்கு நிழல்
சிலருக்கு வெயிலோ?
குவிந்த பொருளோ
விஷமோ சமமாக
அடையாத தெவ்வகையிலோ? (கூவாயோ)

மேலோர் என்றோர் தொகுதி
மீதிப் பெயர்க்கோர் தொகுதி
மேன்மைக் குடியரசில்
இதுவோகதி? (கூவாயோ)


மகவிழாவின்போது நடைபெற்ற தேர்தலில் சுப்பரத்தினத்தின் பாடல்கள் எதிர்க்கட்சியின் ஆதரவை மக்கள் மனத்திலிருந்து அழித்த