இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
பாரதிதாசன்
தோடல்லாமல், எதிர்க்கவும் வலிமை தந்தன. அந்தத் தேர்தலில் இருபது ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி படுதோல்வியடைந்து ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்கப்பட்டது.
அரசியல் ஈடுபாடு இருந்தாலும், ஆசிரியப் பணியையும், தமிழ்ப் பணியையும் பாரதிதாசன் மிக்க ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் சிறந்த கவிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும் விளங்கினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் புதுவைச் சிவம், வாணிதாசன், பாவலர் சித்தன், பா. முத்து ஆகியோர்.