உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும் தாசனும்

21

தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு 'சுதேசி' என்ற அளவிலேயே பாரதிதாசன் அவரை அறிந்திருந்தார். அவரைப் பார்க்கும்போ தெல்லாம் 'இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்' என்று பாரதிதாசன் நினைப்பதுண்டு.

மற்கள ஆசிரியர் வேணுநாயக்கருக்குத் திருமணம். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பிறகு விருந்து நடைபெற்றது. வேணு நாயக்கரின் நண்பர்கள் முப்பது பேர் கூடத்தில் உட்கார்ந்து பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். பின்னர் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வேணுநாயக்கர் பாரதிதாசனைப் பார்த்து, சுப்பு ஏதேனும் பாடு என்று கேட்டுக் கொண்டார்.

'வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?' என்ற பாடலையும் தொன்று நிகழ்ந்த தனைத்தும் என்ற பாடலையும் இசையோடு கணிரென்று பாடினார் பாரதிதாசன். அவர் பாடிக்கொண்டிருந்தபோது, அங்கமர்ந்திருந்த பலரும், பின்பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவரையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டை நிறுத்தியதும் பாரதிதாசனும் திரும்பிப்பார்த்தார். பின்பக்கத்தில் ரவிவர்மாவின் பரமசிவம் அமர்ந்திருந்தார்.

அப்போது வேணுநாயக்கர், "அவுங்க யாருன்னு தெரியுமா? அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்ரமண்ய பாரதின்னு சொல்றாங்கல்ல" என்று பாரதிதாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

உடனே பாரதியார் "பொருளுணர்ந்து நன்றாகப் பாடினீர்கள். தமிழ் வாசிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார்.

கொஞ்சம் என்று அடக்கமாக விடையிறுத்தார் சுப்புரத்தினம்.

பாரதியார் வேணுநாயக்கரைப் பார்த்து, "வேணு ஏன் இவரை நம்ம வீட்டுக்கு அழைத்து வரல?" என்று கேட்டார். இந்நிகழ்ச்சியிலிருந்து பாரதி-பாரதிதாசன் நட்பு தொடர்ந்தது.

பாரதியாருக்குப் புதுவையில் வாய்த்திருந்த நண்பர்கள் வட்டம் பெரிது. அரவிந்தர், வ.வெ.சு.அய்யர், மண்டையம் பூரீனிவாசாச் சாரியார் ஆகிய தேச பக்தர்கள் ஒரு வகை, வ.ரா. முத்தியாலு பேட்டை கிருஷ்ணசாமி செட்டியார், செல்வர் பொன்னு முருகேசம் பிள்ளை குவளைக் கண்ணன், எழுத்தர் சுந்தரேச ஜயர் என்ற நண்பர் கூட்டம் மற்றொரு வகை. முருகேசம் பிள்ளை பாரதியை ஆதரித்த