உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

புரட்சிக்கவி

இருட்டறையில் உள்ளதட உலகம், சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!

கவிஞன் காலம் பெற்றெடுத்த குழந்தை, ஷெல்லி பிரெஞ்சுப் புரட்சி பெற்றெடுத்த குழந்தை என்று மேலைநாட்டு இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜார் மன்னனின் கொடுமையைத் தாங்காத ருசியம் லெனினை ஈன்றது.

"தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்"

என்று பாரதியின் பிறப்பின் இன்றியமையாமையைப் பாரதிதாசன் பாடியுள்ளார். பாரதி நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தேசியக் கவி. பாரதி தனக்குப்பின் விட்டுச் சென்ற மூடநம்பிக்கை ஒழிப்பு. பெண்விடுதலை, தமிழ்வளர்ச்சி, பொருளாதாரச் சமன்மை ஆகியவற்றைப்பாட ஒரு கவிஞன் தேவைப்பட்டான். அப்பணியை நிறைவேற்றத் தோள் தட்டிக் கிளம்பியவர் பாரதிதாசன். 1937ஆம் ஆண்டு அவர் எழுதிய புரட்சிக்கவி' என்ற குறுங்காப்பியம் வெளியிடப்பட்டது. அக்காப்பியத் தலைவன் ஒரு கவிஞன். அவன் தன் பேச்சாற்றலால் முடியரசைக் கவிழ்த்துக் குடியரசாக்கினான். அக்காப்பியத்தைப் படித்த தமிழ் மக்கள், பாரதிதாசனையும் 'புரட்சிக்கவி' என்ற அடைமொழியோடு அழைக்கத் தலைப்பட்டனர்.

பாரதிதாசனைப் புரட்சிக் கவியாக மாற்றியவை மூன்று, பாரதியின் தொடர்பு, பிரெஞ்சுப் புதுச்சேரி, பெரியார் ஈ.வெ.ரா.வின் தன்மான இயக்கம். பாரதி சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். சுதந்தரம், சமத்துவம் சகோதரத்துவம் மூன்றும் பிரெஞ்சுப் புரட்சி உலகிற்கு