58
பாரதிதாசன்
தமிழைப் பாரதிதாசன் பல இடங்களில் வாழ்த்திப் பாடி இருக்கிறார். அவ்வாறு பாடும் போதெல்லாம் தமிழைத் தமிழனின் உயிர் என்று கூறுவதில் அவருக்கு அளவற்ற இன்பம்.
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தாயெனில் நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
என்ற வரிகளில் 'தமிழ் தாழ்ந்தால் தமிழனும் தாழ்வான்' என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். திருச்சி வானொலியில் பாரதியைப் பற்றிய கவியரங்கில் பாடும்போது
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
என்று குறிப்பிடுகிறார். இன்பத் தமிழ் என்ற தலைப்பில் பாடும்போது
தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்தத்
தமிழ்இன்பத் தமிழெங்கள்.உயிருக்கு நேர்
என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு தமிழைத் தமிழரின் உயிர் என்று பல இடங்களில் குறிப்பிடுவதோடு, அது எவ்வாறு உயிராக விளங்குகிறது என்பதைக் கழைக்கூத்தாடி ஒருவன் கைவண்ணத்திலும் சுவைபடச் செய்து காட்டுகிறார்.
கழைக்கூத்தாடிகள் செப்பிடு வித்தைகள் செய்து காட்டுவதில் வல்லவர்கள். மாந்தரை மயக்கநிலைக்குக் கொண்டுவந்து அவர்களைப் பேச வைப்பதிலும் வல்லவர்கள். ஒரு கழைக்கூத்தாடி ஓர் எலும்புக் கூட்டைப் படுக்க வைத்திருக்கிறான். அக்கூத்தாடியின் அருகில் மேளம் அடிக்கும் ஒரு சிறுவன்; இருவரும் பேசிக்