உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பாரதிதாசன்

பலாச்சுளை புழியறேன்
திடு திடும் புழி புழி!

கூட்டம் இந்த வேடிக்கையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. கூத்தாடி தொடர்கிறாள்.

தேனும் சேக்கறேன், பாலும் சேக்கறேன்
எளநீர் வழுக்கை இட்டுக் கொழைக்கிறேன்
இடித்த திணைமா இட்டுப் பிசையறேன்
பொடித்த பருப்பும் போட்டுக் கலக்கறேன்
எல்லாத்தையுமே இளஞ்சூடாக்கி,
பல்லாய் நிறையப் பக்குவப் படுத்தினேன்


ஆஹா ஆஹா அண்ணே அண்ணே!
இந்த மருந்துக் கென்னா பேரு?


உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும்
தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ், இதுதான்!
இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
தடவுறேன் தம்பி அடி மேளத்தை!

கூட்டத்தில் இருந்த எல்லாரும் ஆவலோடு எலும்புக் கூட்டையே உற்றுப்பார்க்கின்றனர்.


திடு திடும் திடு திடும் திடு திடும் திடு திடும்
சிரித்தது பாரடா செந்தமிழ்க்கூடு


எலும்புக்கூடாயிருந்த தமிழ்நாடு தமிழ் என்னும் மருந்து அதன்மேல் தடவப் பெற்றவுடன் உயிர்பெற்றுவிடுகிறது.

இப்பாடல் பாரதிதாசன் செய்து காட்டிய தமிழ்வித்தை!

தமிழ் மக்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவர்கள். தமிழர்களின் அகத்துறை இலக்கணம் மிக உயர்வானது. அகத்தில் அமைந்துள்ள திணையும் துறையும் மிக நுட்பமானவை. இயற்கையும், இயற்கையோடியைந்த தமிழர் வாழ்க்கையும்