பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பாரதிதாசன்

பொன்னுடை களைந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்னிடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்; அதோபார்
எழில்நிலா ஒளிகொட் டிற்று
மன்னியே வாழி என்று
கடலினை வாழ்த்தாய் தம்பி!

என்றும்

சிந்தனை வளத்தோடு செழித்த தமிழ்ச் சொற்களால் நயம்படப் பாடுகின்றார் பாரதிதாசன். புறப்பட்ட இளங்கதிரின் பொன்னொளிச் சிதறல்களை, "விழுந்தது தங்கத் தூற்றல்" என்ற தொடராலும், மாலையில் குன்றின் பின் மறையும் கதிரவனைச் 'செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம்' என்ற தொடராலும், மாலை நீங்கி நிலவொளியில் மூழ்கும் கடலின் செயலைப் பொன்னுடை களைந்து வேறே புதிதான முத்துச் சேலை தன்னிடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள் என்ற வரிகளாலும் கூறுவது நயமான கற்பனைகள். சதங்கை ஒலிப்பது போல் கொஞ்சு தமிழால் இப் பாடல்களைப் பாடி இருக்கிறார் பாரதிதாசன்.

உவைத்தீயை ஊது கின்றாய்!
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும் விலக்கார் உன்னை

என்று,

தென்றலின் குறும்பைத் தீஞ்சுவைக் கவிதையாக்கித் தருகிறார்.அழகின் சிரிப்பில் இயற்கையழகைப் பாடினாலும் இடையிடையே நகைச்சுவை விதைகளையும் தூவிச் செல்கிறார் பாரதிதாசன். கீழே