பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 11 பெருகியதுபோல அன்னம்போல் மென்னடையும் முத்துப் பல்லும் தண்ணிர் பட்டபாடு பட்டன. பெண்களை வர்ணிக்கத்தான் உவமை அதிகம் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கும் அவ்வள வாகத் தலைகாட்டவில்லை. தமிழ் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியதும் கருத்திலும் சொல்லிலும் புதுமையும் புரட்சியும் வளர்ந்தன. அவ்விதம் கவிதையின் இனிமையும், கருத்துச் செறிவும் சிந்தனைப்புரட்சியும், உவமை யில் புதுமையும் கலந்து தமிழுக்கு அழகு ஊட்டும் கவிஞர் பாரதிதாசன் ஒருவர்தான். புதுமைக்கு உயிரூற்றான கவிஞரின் நூல்களில் புதுமையான உவமைகள் மலிந்து கிடப்பதில் வியப்பில்லை. வாழ்வின் உண்மைகள் பலவற்றையும் அழகான உவமைகளுடன் கடறுகிறார் அவர், மங்கையர் வனப்பு; காதல் இன்பம், இயற்கை எழில், உழைப்போர் தன்மை, அறிஞர் பண்பு, தமிழின் சிறப்பு-எதுவானாலும் சரி, எதைப்பற்றி வேண்டுமானாலும் சரி, அழகிய புதுமையான உவமைகள் காண, கவிஞர் பாரதிதாசன் நூல் களைப் படித்தால் போதும். அவரது கவிதைத்தொகுப்பு, குடும்ப விளக்கு" 'அழகின் சிரிப்பு இசை யமுது எதிர்பாராத முத்தம் இருண்ட வீடு பாண்டியன் பரிசு’ முதலிய எல்லா நூல்களிலும் எண்ணற்ற நயங். கள் மலர்ந்து ரசிக உள்ளத்துக்குச் சுவை அளிப்பது போல, உவமை நயமும் களிப்பூட்டு கிறது. ஆராய ஆராய இனிப்பன அவை.