பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ; பாரதிதாசன் உவமைநயம் சூடப் படாதென்று சொல்லி வைத் தார்தலை சூடத்தகும் கிரீடத்தை-நாம் தொடவும் தகா தென்று சொன்னார் நறுந்தேன் துவைந்திடும் பொற் குடத்தை! இவ்விதம் உவமைகளாகவே அடுக்கிவந்து முடிவு கட்டும் போது, இவ் உருக்கம் நிறைந்த சொற்கள் மனித தன்மை உள்ள மனதைத். தொடாமலா போகும்! இத்தகைய கட்டுப்பாடு வளர்க்கும் சமூகத்தை நோக்கி ஆவேசமாகக் கவிஞர் கருத்துக்களை உதிர்க்கும் இடங்களில் உணர்ச்சியும் உவமை களும் பொங்கித் துள்ளுகின்றன. "ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம் அடைகின்ற காதலுக்கும் மாற்றமுண்டோ? பேடகன்ற அன்றிலைப் போல மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்! வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ? பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு, பார்த்ததுண்டோ! fங்காரமிட்டுத் திரியும் தேனி போல, கிளு கிளுத்து ஊர்கின்ற தென்றல்போல, பசிக்கும் நல் வயிறுபோல, காதலின்பம் நுகர்வதும் ஆண் பெண் இயற்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது இயல்பான இதில் மகளிர் உரிமையை மட்டும் பறிப்பதென்றால்? அதற்குப் பெற்றோர் களே துணை என்றால் அவர்களது கடின சித்தம் தான் என்ன!