பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதிதாசன் உவமை நயம் நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ! சரிதானே! பானைச் சோறு பெற்ற தரித்திரனின் உள்ளப் பெருக்கை ஒத்தது, அழகுப் பசிகொண்டு எழில் பருகத் திரியும் கவியுள்ளம் முழு நிலவைக் கண்டதும் அடைகின்ற பூரிப்பு. வேறொரு பாட்டு. நிலவைக் கண்டு கவி யுள்ளம் மகிழ்கிறது. கவிதை உவமையாய் மின்னு கிறது, எழிலும் எளிமையும் உயிர்ப்பும் நிறைந்த சொற்களில், முழுமை நிலா அழகு நிலா ! முளைத்தது விண்மேலே-அது பழமையிலே புது நினைவு பாய்ந் தெழுந்தாற் போலே! அழுதமுகம் சிசித்தது போல் அல்வி விரிந்தாற்போல்-மேல் கழற்றி எறிந்த வெள்ளித் தட்டு தோத்திக் கிடந்தாற் போல்’ ரசிக்க ரசிக்க மகிழ்வுதரும் உவமைகள் இல் லையா இவை இன்னுமொரு காட்சி. உருவக மாய் விளங்குகிறது, கற்பனையின் விரிவைக் காட்டும் விந்தை அது. என்ன?

கழுத்தை உயர்த்திக் கம்பீரமாகக் கூவும் சேவல், அங்குமிங்கும் சிதறுகின்ற குஞ்சுகளைக்