பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 41 போல! அவள் அடிக்க்டி உடை மாற்றம் செய்து பகட்டும் கோலம் நன்றாகத்தானிருக்கிறது. கவிதையிலும்தான்! "தங்க இழையுடன் நூலை வைத்துப் பின்னிய ஆடை, காற்றில் பெயர்ந் தாடி அசைவதைப் போல் நன்னீரில் கதிர் கலந்து நளிர் கடல் நெளிதல் கண்டேன்' கொண்ட ஆடை பளபளப்பது போலக் கதிரொளியில் தகதகக்கும் கடல் உடை மாற்று கிறது எப்படி? 'பொன்னுடை களைந்து வேறே புதிதான முத்துச் சேலை தன் இடை அணிந்தாள் அந்தக் தடங்கடற் பெண்ணாள். தம்பி என்னென்று கேள். அதோ பார், எழில் நிலா ஒளி கொட்டிற்று!’ கடல் வனப்புக்காட்டிய கவிஞர் ஆற்றை வர்ணிக்கிறார். ஆற்றில் வெள்ளம் வருகிறது. எப்படி? 'பெருஞ்சிங்கம் அறைய வீழும் யானை போல், பெருகிப் பாய்ந்து வரும் வெள்ளம்.” வெள்ளத்தைச் சித்திரிக்கும் உவமைகள் அத்தனையும் அழகின் சிரிப்பு. இரு கரையும் ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச்