பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஆ பாரதிதாசன் உவமை நயம் பதுபோல்’ என்றும், யோசித்து ஒன்றின் கருத்தை விளக்குவதை சுவையறிந்த பிறகு உணவின் சுகம் சொல்வார் போல்’ என்றும் கடறும் உவமை கள் ரசனைக்குரியன. கிட்டாத நிலையில் ஒரு நல்ல பொருள் அகப் படுவதால் அடையும் பெருமகிழ்வுக்கு இந்த உவமை சாலவும் பொருந்தும்: சிந்தை நைத்து கைம்மையாய் வாழ்வாள் நல்ல கணவனைப் பெற்றதைப் போல்’ வானிலே விந்தை உருவங்கள் செய்த மேகங். கள் குன்றிலே புகையாய்க் கவிகின்றன. பனிப் படலம்போல் மேகம் சூழ்ந்த குன்று அடிமையின் உள்ளம் போல் புகைகிறதாகக் கற்பனை. அதை விளக்கும் பாட்டு: ஆனைகள் முதலைக் கூட்டம் ஆயிரம் கருங்குரங்கு வானிலே காட்டி வந்த வண் முகில் ஒன்று கூடிப் பானையில் ஊற்று கின்ற பதநீர் போல் குன்றில் மொய்க்கப் போனது, அடிமை நெஞ்சம் புகைதல் போல் தோன்றும் குன்றம்'