பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ; பாரதிதாசன் உவமை நயம் பேழை காணாமற் போயிற்று. அதை யாரோ பதுக்கி விட்டார்கள். ஏமாற்றிக்கொண்டு போய், எங்கே என்று தெரியாமல் மறைத்து விட்டனர். அது எதைப் போலிருக்கிறது என்றாலோ, கொஞ் சம் தீனியோட்டு ஆசை காட்டிக் கோழியை அமுக்கிவிடுவது போலவாம். அதை தேடினால் கிடைத்து விடுமா! பதுக்கியவர்கள் சொன்னால் தான் தெரியும், "தீனியிட்டுக் கோழியினை மடக்குவார் போல் மூடிவிட்டார் பேழை வி:ை? அவர்கள் கொஞ்சம் மூச்சு விட்டால் தானே நான் அறிதல் கூடும்?" குள்ளநரிச் செயலுடையான் நரிக்கண்ணன்' நாட்டின் தலைவன் ஆகிவிட்டான். அவனுக்கு ஒரு மந்திரி. அவன் மைந்தன். தந்தை நல்லவன், கொடியவனை அடுத்துக்கெடுத்தலே அவன் கொள்கை என்று விளக்குகிறான். தந்தை மந்திரி என்பதற்காகக் கொடியவனைப் போற்ற முடி யுமா, அவனைக் கண்டு அஞ்சுகிறேன் என்னும் மைந்தன் கேட்கிறான். விலங்கு பழக்குகிறவன் வளர்க்கும் வெள்ளாடுதான். அவன் பழக்கும் வேங்கைதான். என்றாலும் அந்த வேங்கை முன் வெள்ளாடு மகிழ்வுடன் துள்ளி நெருங்கவா செய்யும்: விலங்கு பழக்கிடுவானின் வெள்ளாடொன்று வேங்கையிடம் நெருங்கையிலே மகிழ்வதுண்டோ? தந்தை வேலை பார்க்கும் இடம் என்பதற். காக, கொடியவனின் செயலை ஒப்பமுடியுமா? அவன் எனக்கு வேப்பங்காயே என்கிற மகன் சொல்கிறான். தமிழன்தான் அவன். தெலுங்குப்