பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் காதல்

"தோழனே உன்னிடத்தில் சொல்லுகின்றேன், என்காதல் பாழாகக் கூடாது. பாழானால் வாழ்வேது? - நேற்றுமுன்னாள் நேரிழையை நேரினிலே கண்டேன் நான், நேற்றிரவும் கண்டு நெடுநேரம் பேசினேன். என்னைக் கணவனென எண்ணிவிட்டாள் ஆதலினால் பொன்னான வாய்திறக்கப் பூவையவள் நாணமுற்றாள். சின்ன வயதுடையாள், தேவைக்குத் தோதுடையாள் மின்னல் இடையாள், மிகுமையல் கொண்டுள்ளாள். என்னையவள் காதலித்தல் யானறிவேன். நான் அவளைப் பொன்னாய் மதிப்பதையும் போயுரைக்க வேண்டாமா? ஆதலின் நீபோய் அவளிடத்தில் கூறிவிடு. மாதரசி சொல்வதைநீ வந்துசொல்வாய் என்னிடத்தில்! செங்கதிரும் மேற்கில் மறைந்ததுகாண்: தேனிதழாள் அங்கிந்த நேரம் அழகாக வந்துநிற்பாள். மாமரத்தின் தெற்கில் வழிபோகும், அங்கே ஓர் பூமரமும் நிற்கும் புளியமரத் தண்டையிலே, சோளம் வளர்ந்திருந்கும் கொல்லையொன்று தோன்றும், அதன் நீள வரப்பினில்தான்் நின்றிருப்பாள் என்கின்றேன்" என்று தலைவன் இசைக்கவே, அத்தோழன்

"இன்றிரவே சந்திக்க எண்ணமா" என்றுரைத்தான்். ஐயையோ இன்னும் அரைநொடியில் அன்னவளை மெய்யிறுக நான்தழுவ வேண்டுமடா தோழா,