பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 111

விரைந்தோடு, மங்கையிடம் என்னுடைய மேன்மை, பெருஞ்செல்வம், கல்வி, பெரியபுகழ் அத்தனையும் சொல்லி மடமயிலாள் தொட்டிழுக்கத் தோதுசெய்வாய் வல்லியிடம் என்றன் வயதைமட்டும் கூறாதே! ஆங்கே பிறப்பில் அமைந்ததென்று சொல்லிவைப்பாய்! தேன் தடவ நேர்ந்ததனால் சேர்ந்த நரையென்று மான்விழியாளுக்குரைத்து வைத்துவிடு முன்னமே!

முப்பத்திரண்டு பல்லும் மோழையே, ஏனென்றால் உப்பில்லாப் பத்தியத்தால் அப்படிஎன்றோதிவிடு! கண்ணின்ஒளி மங்கியதைக் காதலிக்குக் கூறாதே. பெண்ணரசை மெல்லத் தடவிப் பிடித்திடுவேன் சார்ந்த இருட்டில் தடமாட்டம் யாருக்கும் வாய்ந்த இயற்கைஎன வஞ்சியவள் எண்ணிடுவாள் கற்பை எனக்களித்த பின்பு கதை தெரிந்தால் குற்றமில்லை போபோபோ என்றான் கொடுங்கிழவன். தோழன்போய் மீண்டுவந்து சொல்லுகின்றான்: ஐயாவே வாழைத் துடையுடைய வஞ்சிவந்து காத்திருந்தாள் சொன்னதெல்லாம் சொன்னோன் துடித்துவிட்டாள் காதலினால்.

கன்னலின் சாற்றைக் கடிதுண்ண வேண்டுமென்றாள். காற்றாய் விரைந்துவந்து கட்டித் தழுவிமையல் ஆற்றாவிடில் நான் போய் ஆற்றில் விழுந்திறப்பேன், என்று பறந்தாள். இதோ என்றேன், ஓடிவந்தேன் சென்றுபேரின்பத் திரைகடலில் மூழ்கிடுவீர் போய்வார் என்று புகன் றுதோழன் மறைந்தான்்.