பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 121

மருத்துவச்சி அத்தான்ே அத்தான்ே என்னண்டை வந்திடுவாய் செத்தாலும் சாகின்றேன் நீஎதிரே செல்லாதே, பாயும் சிறுத்தைமேல் பாய்ச்சிடுவேன் என்கத்தி நாயின் விலாவின் நடுப்பாயும் என்கத்தி. மருத்துவன் சாக்காட்டுக் கஞ்சும் சழக்கன்நான் இல்லையடி நோக்காட்டுக் காலோடு நூலிழையே செல்லாதே, வெள்ளரிக்காய் என்கத்தி வீச்சுக்கு நிற்குமா தள்ளடிநீ அச்சத்தைத் தங்கடிநீஇவ்விடத்தில். மருத்துவச்சி கத்தியினை மேலெடுத்துக் காட்டினையோ இல்லையோ பத்தரிசிக் கோடுகின்ற பார்ப்பான்போல் ஓடிற்று. வந்த சிறுத்தை ஆது வாலடங்க ஓடியது முந்தநாம் சென்று முடிப்போம் நமதுபணி.

(போதல்)

மருத்துவச்சி செங்குத்தாய் நிற்குமலை தேனேநீ பார்த்தேறாய் அங்குள்ள பள்ளத்தை ஆயிழையே பார்த்துநட!

(ஏறிப் போகிறார்கள்)

மருத்துவச்சி

அத்தான்ே நாம்தேடும் அம்மருந்தைக் காணோமே

எத்தொல்லை பட்டேனும் இங்கதனைத் தேடுவமே.

(தேடுகிறார்கள்)