பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 15

நன்றாக உங்களுக்கு இராமன் அருளுண்டு; வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே, ஏனிங்கு நின்றீர்? எடுத்துவருவீர்மலையை'

★ ★。 丸 என்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன் குன்றுபெயர்வது கொஞ்சமும்பொய் யல்லவென்று குப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம் 'மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும் அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை இந்தச் சஞ்சீவிமலை தன்னையெடுத்துவர அந்த மனிதன் அங்கே ஆணை இடுகின்றான். நாலடியில் இங்கு நடந்துவந்து நாம்மலையின் மேலிருக்கும் போதே வெடுக்கென்று தூக்கிடுவான். இங்கு வருமுன் இருவரும் கீழ்இறங்கி - அங்குள்ள சாரல் அடைந்திடுவோம் வாவென்றான்.

× ★ 丸 'ராமனெங்கே ராமன் அருளெங்கே! சஞ்சீவி மாமலையைத் தூக்குமொரு வல்லமை எங்கே, இவற்றில் கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப் பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்பது அரிதாகி அடிமையாய் வாழோமே? ஆண்மைதான்் இன்றி மிடிமையில் ஆழ்ந்து; விழியோமே?” என்றந்த வஞ்சியுரைத்தாள் பின் மற்றோர் பெருஞ்சத்தம், அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய்திட்டதே.

丸 ★ 丈 'அம்மலையை ஓர் நொடியில் தூக்கிவந்தையாவே உம் எதிரில் வைக்கிறேன் ஊஹ-ஹ ஊஹ-ஹ'

★ ★ *