பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரதிதாசன்

தண்டோராக்காரன் : அரசாங்க பொக்கிஷத்தைத் திறப்பாருண்டா? ஆயிரரூபாய் பரிசாய்ப் பெறலாங் கண்டீர்! வரவிருப்பம் உடையவர்கள் வருக! தீம் தீம்! மன்னர்,இடும் ஆணையிது தீம்தீம் தீம்தீம்: கிழவர்: சரிஇதுதான்் நற்சமயம்! நான்போய் அந்தத் தறுக்குடைய சேனாதி பதியைக் காண்பேன். வரும்வரைக்கும் பத்திரமாய் இருநான் சென்று

வருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா! காட்சி - 5

(மந்திரியின் முன்னிலையில்

கிழவர் அரசாங்க பொக்கிஷத் தைத் திறந்தார். மந்திரி கிழவரைக்

கூட்டிக்கொண்டு சேனாபதியிடம் வந்தார்.)

மந்திரி :

தள்ளாத கிழவரிவர் பொக்கிஷத்தின்

தாழ்தன்னைச் சிரமமின்றித் திறந்து விட்டார்! சேனாபதி :

கொள்ளாத ஆச்சரியம் பரிசு தன்னைக் கொத்துவிடு சீக்கி ரத்தில்!

மந்திரி : விள்ளுதல்கேள்! இப்பெரியார் நமக்கு வேண்டும்!