பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரதிதாசன்

மாப்பிள்ளை பார்த்தான்் மகிழ்ச்சி கொண்டான். திருமணத்தின் தேதி குறிக்க வருவதுபோலவந்தேன் இங்கே. மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள். தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன்.

அம்மாக்கண்ணு :

இன்று நீங்கள் இங்குவராவிடில் என்றன் உயிரே ஏன் இருக்கும். பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக் கையால் அள்ளினால் வாயோ கசக்கும்; பச்சைத் தண்ணி பருகி அறியேன். ஏக்கம் இருக்கையில் தூக்கமா வரும்? பூனை உருட்டும் பானையை அவ்வொலி நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன். தெருநாய் குரைக்கும் வருகின்றாரோ என்று நினைப்பேன் ஏமாந்து போவேன். கழுதை கத்தும், கனைத்தீர் என்று எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன். உம்மைஎப்போதும் உள்ளத்தில் வைத்தால் அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள்! சட்டியும் நீங்கள்! பானையும் நீங்கள்! வீடும் நீங்கள்! மாடும் நீங்கள்! திகைப்படைந்து தெருவிற் போனால் மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள்! கழுதை நீங்கள் குதிரை நீங்கள்! எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும். இனிமேல் நொடியும் என்னை விட்டுப் பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும்.