பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 85

வெள்ளையப்பன் சொல்லுகிறான் :

அழாதே, தரையில் அம்மாக் கண்ணு விழாதே, உன்னை விட்டுப் பிரியேன், துடைகண்ணிரைப், புடவையும் நனைந்ததே! பயித்தியக் காரி பச்சையாய்ச் சொல்வேன். என்னுயிர் இந்தா! பிடி உன்னதுதான்்!

அம்மாக்கண்ணு :

இரிசன் மகளையும் என்மகனுக்கே பேசி முடிப்பீர்; பின்பு நீங்களும் இங்கேயேதான்் தங்கினால் என்ன? என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ? இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே. மண்ணாங் கட்டிதான்் மனைவியோ? இங்குள பொன்னாங் கட்டிபோயொழிந்தாளோ?

வெள்ளையப்பன் :

உறுதி உறுதி உன்மகனுக்கே இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன். என்மகன் பெரியதோர் இளிச்சவாயன்; மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்்! பெண்ணா அவள்? ஓர்பேய் மூதேவி! இரு போய் அந்த இரிசனைக் கண்டு பேசி விட்டுப் பின்வருகின்றேன்.

காட்சி-7

வெள்ளையப்பன் மாறுபாடு

வெள்ளையப்பன் :

இரிசனார் வீட்டில் இருக்கின்றாரா?