பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் Ei:

வீராதி வீரனோவேந்தர்சூடாமணியோ சீராமன் என்னும் திருநாமம் பெற்றானோ.

அலைகடல்சூழ் வையகத்தே ஆரும் அசைக்கஒண்ணாச் சிலையை வளைத்தொடித்துச்சீதை மணம் செய்தான்ோ.

பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்கோளும் தத்திவிழ எண்த தடம்பெரிய சேவகனோ

சீராம ராமனோசீதை சிறை மீட்டவனோ பேரால் பெரியவனோபேருலகை ஆண்டவனோ.

சிதம்பரர் தாலாட்டு (19 நூற்றாண்டு 30 கண்ணிகள்)

தான்ந்தழைக்கத் தரணியுள்ளோர் ஈடேற ஆனந்தத் தாண்டவமாய் ஆடும் சிதம்பரனோ

வெண்ணலே வெண்மதியே வெண்குடையைத்தில்லைநகர்க் கண்ணலுடன் கூடிவிளையாடவா அம்புலியே

உம்பர் பெருமானே உமையாள்தன் நாயகனே செம்பொன் மணிமன்றில் சிதம்பரரே கண்வளf

பாலனென்று மார்க்கண்டன் பத்திதனையறிந்து காலன் தனையுதைத்துக் கால்கள் சிவந்தான்ோ

தேவி சிவகாமியுடன் சிதம்பரரே கண்வளf கோவில் பரிசனமும் கூடவே கண்வளf

(இது முயன்று செய்ததாலாட்டாயிருப்பினும்,சில நயங்கள் பொருந்தியிருக்கக் காணலாம்.)

குமரவேள் தாலாட்டு