பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 87

பிள்ளைக் கருங்குயில் ஓர் பின்பாட்டுப் பாடுவதும் - கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய் நீ

குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தும்பில் கப்பும் கழுவடையில் கண்மணியும் பொன்னியும்:

ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னிராம்! சூடாமணிவரிசை தூண்டாச் சரவிளக்காம்!

எப்போதும் தட்டார் இழைக்கும்

மணியிழையில் கொப்படம் ஒன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ?

ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும் வந்தாலும் நானும் வயிரத் திருகாணி,

ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில், உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா?