பக்கம்:பாரதித் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சென்னை வாசிகளின் கிதானம் 119

இவர்கள் என்ன நினைத்தாலும் சரியே. இனி அதைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கூறத் துணிய மாட்டார்கள் என்று நேற்றே தெளிவாய்விட்டது.

சி. சுப்ரமணிய பாரதி

குறிப்பு:- 1. வியின சந்திரபாலர் வங்காளத்து தேசிய வீரர்களில் ஒருவர். சிறந்த பேச்சாளர். இந்தியாவின் ஒரு கோடியிலிருந்து மற்றாெரு கோடி வரையில் அந்தக் காலத்தில் அவரது பேச்சு ஒலித்தது. மக்கள் அதைக் கேட்டுப் புது உணர்ச்சி பெற்றனர். 1907-ல் அவர் சென்னை யில் பேசிய பேச்சு மக்கள் மனத்தில் தேசீய நெருப்பை ஓங்கி வளர்த்தது. அதனல் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறும்படி சர்க்கார் அவரை வலுக்கட்டாயப் படுத்தியது.

அவருடைய பேச்சும், நியூஇந்தியா, வந்தேமாதரம் என்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைக்ளும் இளைஞர்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதையே பாரதியார் இக்கட்டுரையில் குறிப்பாக எடுத்துக் கூறுகிரு.ர்.

2. பஞ்சாப்சிங்கம் என்று போற்றப்பட்ட லாலா லஜபதிராய் 1907 மே 9ஆந் தேதி பர்மாவுக்கு நாடு கடத்தப் பட்டார். ஸர்தார் அஜித் சிங்கும் அவரோடு நாடு கடத்தப் பட்டவர். லாலா லஜபதியை நாடு கடத்தியதை ஒட்டியே விக்டோரியா நகர மண்டபத்தில் கூட்டம் கூடியிருக்கிறது.

லாஜபத்ராய் துதி, லாஜபத்ராய் பிரலாபம் என்று பாரதியார் பாடியுள்ள இரண்டு அழகிய கவிதைகளும் இந்தத் தேசப் பிரஷ்டத்தைக் குறித்தே எழுந்தவை.

1907 டிசம்பர் 27ஆந் தேதி தொடங்கிய சூரத் காங்கிர சுக்குச் சற்று முன்பே லஜபதிராய் விடுதலையடைந்து நாடு திரும்பினர். அவரை அந்தக் காங்கிரசுக்குத் தலைவராக்க வேண்டுமென்று தேசீயவாதிகள் விரும்பினர். ஆளுல் அடங்கிய இயல்புள்ள லஜபதிராய் அந்தப் பெருமையை ஏற்றுக்கொள்ள இசையவில்லை. மிதவாதிகளும் தேசீயவாதி களும் மாறுபட்டு நின்ற சமயத்தில் தலைமை வகிக்க அவர் விரும்பவில்லை.

லஜபதி விடுதலையாகி யிருந்தாலும் இரகசியப் போலிஸின் (சி. ஐ. டி. கண்காணிப்பிலேயே இருந்து