பக்கம்:பாரதித் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் நாஷனலிஸ்கு டெலிகேட்குகளுக்கு நோட்டிஸ்

19 டிசம்பர் 1907 பிலவங்க மார்கழி 4

இதற்கு முந்திய நோட்டீஸ் 17-ஆந் தேதி மித் திரனில் போட்டதிலிருந்து அனேக நாஷனலிஸ்டு டெலிகேட்டுகள் சென்னைக்கு சனிக்கிழமையன்று வந்து அன்று சாயந்திரமே சூரத்துக்குப் புறப்பட்டுப் போகக்கூடுமென்று தெரிவித்திருக்கிறார்கள். ஆகை யால் இந்த மாகாணத்திலிருந்து போகும் நாஷன லிஸ்டு டெலிகேட்டுகளுக்கு நாம் தெரிவிக்கிற தென்னவென்றால் நாம் காங்கிரசுக்கு இரண்டு பிரி வாகப் போகவேண்டியிருக்கிறது. அதாவது நாளே 20-ஆம் தேதி சாயந்திரம் பேர்கிறவர்கள் ஒரு பிரிவு, 21-ஆம் தேதி சாயந்திரம் போகிறவர்கள் மற்றாெரு பிரிவு. டெலிகேட்டுகளோ விஸிட்டர்களோ தங்க ளுடைய விருப்பத்தை 87, துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை சுதேச கிருஹத்திற்குத் தெரிவித்தால் எந்தப் பிரிவோரும் போகலாம்.

வி சுப்பிரமணிய பாதி

சுதேசக்கிருஹம். குறிப்பு:- இந்த இரண்டு அறிக்கைகளிலிருந்து குரத் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டு டெலிகேட்டுகளே அழைத்துச் செல்வதில் பாரதியர் உற்சாகமாக முனைந்துநின்றிருக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/121&oldid=605374" இலிருந்து மீள்விக்கப்பட்டது