கிச்சடி
காளிதாஸன்
19 ஜனவரி 1916 ராr.ல தை ே
சமீபத்திலே, பம்பாயில் கூடிய காங்கிரஸ் சபை, முஸ்லீம் சங்கம் முதலியவற்றில் நடந்த உபந்நியாசங்களை வாசித்துப் பார்த்தேன். பெரும் பாலும் ரஸ்மாகத்தான் இருந்தது. இவை போன்ற பிரசங்கங்களை யெல்லாம் தமிழில் தெளிவாக மொழி பெயர்த்து அப்போதைக்கப்போது குட்டிப் புத்த கங்கள் போட்டால் நல்லது. இந்த விஷயத்தில் ஸ்ரத்தை யெடுத்தால், தமிழ் நாட்டுக்கும் உப காரம்; அவர்களுக்கும் நல்ல லாபமேற்படும். சபை களிலே இரண்டு விதமுண்டு. சபை முடிந்தவுடனே செய்கை தொடங்குவதற்கு ஆகவேண்டிய விஷயங் களை முடிவு செய்யும் சபை ஒரு வகை. பொதுப் படையாக நியாய நிர்ணயங்கள் செய்து விட்டுக் கலையும் சபை மற்றாெரு வகை. முதல் வகுப்பில் சேர்ந்த சபைகளில் மேற்கோள் எடுத்துக் காட்டுதல் குறைவாக இருக்கும். இரண்டாவது வகுப்பு சபை களில், அந்தப் பண்டிதர் இப்படிச் சொன்னர்; இந்தப் பண்டிதர் அப்படி எழுதி யிருக்கிறார் என்று மேற்கோள் வசனங்கள் மிகவும் அதிகமாக நடை பெறும். பம்பாயில் நடந்த சபைகள் பெரும்பாலும் டிெ இரண்டு லக்ஷணங்கள் சேர்ந்தவையாதலால்