பக்கம்:பாரதித் தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் 175

நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது.

என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்கு கிருேம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்க முண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், இறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாவுை

வேருெ 3$rproo cu 5:໕໙.

இந்த திமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறி வேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனல் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளே வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவா விட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நோே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமி ழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த் தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.

குறிப்பு:-பாரதியாரின் அளவு கடந்த தாய் மொழிப் பக்திக்கு இக்கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. தாழ்வு மனப்பான்மையுற்றுச் சோர்ந்து கிடந்த தமிழரைப் பாரதி யார் இது போன்ற வசனங்களாலும், ‘யாமறிந்த மொழி களிலே’ என்று தொடங்குவது போன்ற பாடல்களாலும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்ததோடு தமிழினிடத்தே மிகுந்த பற்றும் பெருமையும் கொள்ளுமாறு செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/174&oldid=605455" இலிருந்து மீள்விக்கப்பட்டது