பக்கம்:பாரதித் தமிழ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் சர்வகலா சங்கம்

சக்திதாஸன் 26 ஏப்ரல் 1916 நள சித்திரை 14

நமது தேசத்தில் இப்போது புதிதாக யோசனை செய்யப்படும் காரியங்களில் பூவிைல் பூரீ கார்வே என்பவர் ஏற்படுத்தப் போகிற ஸ்திரீகளின் சர்வ கலா சங்கம் பிரதான வகுப்பைச் சேர்ந்தது. இந்த முயற்சிக்குச் சர்க்காரின் உதவி கிடைத்தால் அத பூரீ கார்வே மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள் ளக் காத்திருக்கிரு.ர். அவ்வுதவி பின்னிட்டுத்தான் கிடைக்குமென்றால் அதுவரை தமது காரியத்தை இவர் நிறுத்தி வைக்கப் போகிறதில்லை. ஜனங் களின் சஹாயத்தை மாத்திரமே வைத்துக்கொண்டு இந்தச் சர்வகலாசங்கத்தை ஸ்தாபனம் செய்து விடலாமென்ற நம்பிக்கை இவருடைய மனத்தில் பரிபூரணமாக ஏறியிருக்கிறது. ஆனல் இவர் ஒரு விஷயத்தை முன்யோசனை யில்லாமல் தொடங்கிப் பின்னிட்டு அதன் கஷ்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இடைமுறிந்து போகும் தன்மையுடைய வரல்ல. தம்மால் நிர்வகிக்க முடியாத காரியத் தைப் படபடத்த விருப்பத்தாலே கைக்கொள்ளக் கூடியவரல்ல. இவர் ஒன்றைத் தொடங்கினல் அக் காரியம் தெய்வங்கள் எதிர்த்து நாசஞ் செய்தா லொழிய மனிதர் எதிர்ப்பினலே நின்று போய் விடாது. முதிர்ந்த அறிவு, வயது, அநுபவம் இவற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/175&oldid=605457" இலிருந்து மீள்விக்கப்பட்டது