பக்கம்:பாரதித் தமிழ்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுப் பேய் 185

காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்த மாகவில்லையே’ என்றேன். “அர்த்தமா தெரிய வில்லை? காளிதாசன், காளிதாசன்! கதை கதை’ என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றாெரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச் சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப் பிட்டு, காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிருள். இ ப் படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.

இதனுடைய ஸஅrமம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையாது.