பக்கம்:பாரதித் தமிழ்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூச்சித் தேவன் 197

வந்து வைத்தாள். அதை இவன் எடுத்துக் குடித்துக் கொண்டிருக்கையில், கிழவி சூத்திரன் தொட்ட பாத்திரத்தைத் தான் தொடக்கூடாதாகையால் அதைக் கழுவும் பொருட்டு மற்றாெரு பாத்திரத்திலே ஜலம் கொண்டு வருவதற்காக உள்ளே போனள். திரும்பி வந்து பார்க்கையில் பூச்சித்தேவனையும் காணவில்லை ; செம்பையும் காணவில்லை. கிழவி கூவே கூகூவே கூ என்று கத்துகிருள். இந்தக் கூக்குரலைக் கேட்டுப் பக்கத்து வீட்டுப் சுப்பா சா ஸ் தி ரி குடுகுடுவென்று வெளியே ஒடிவந்து, “என்ன ஸங்கதி?” என்று கேட்டார்.

‘அந்தப் படுபாவி பூச்சித்தேவன் வந்து குடிக்கத் தீர்த்தம் கேட்டான். செம்பிலே கொண்டுவந்து கொடுத்துவிட்டு உள்ளே .ோய்ப் பாத்திர சுத்திக்கு வேறே தீர்த்தம் கொண்டு வருமுன்னே ஆளைக் காண வில்லை. செம்பைக் கொண்டு போய்விட்டான். நான் என்ன செய்வேன்? நல்ல செம்பு. வாங்கி மூன்று மாதங்கூட ஆகவில்லை’ என்று கிழவி சொன்னாள்.

“எவ்வளவு நாழிகை யாச்சுது?’ என்று கேட்டார் சுப்பா சாஸ்திரி. அதற்குக் கிழவி, ‘இப்போதான். ஒரு நிமிஷங்கூட ஆகவில்லை”

என்றாள்.

சாஸ்திரி திரும்பிப் பார்த்தார். ஏறக்குறைய 15 வீடுகளுக்கப்பால் எதிர்ப் பத்தியிலே யிருந்த ஒரு கடையின் முன்பு பூச்சித்தேவன் நின்றுகொண் டிருப்பதைக் கண்டு. ஒரே ஒட்டத்தில் கடைக்குப் போய்ச் சேர்ந்தார்.

அங்கே பூச்சித்தேவன் பாத்திரத்தைக் கடைச் செட்டியிடம் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு கால் ரூபாய் கொடும், செட்டியாரே. நாளைக் காலையில் வந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்து