பக்கம்:பாரதித் தமிழ்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுச்சேரியில் புயற் காற்று

சி. சுப்பிரமணிய பாரதி எழுதியது

27 நவம்பர் 1916 தள கார்த்திகை 13

இரவு

நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி புதன்கிழமை இரவு புதுச்சேரியில் யுகப் பிரளயத் தைப் போலே யிருந்தது.

நெடும் பொழுதாக - புதன்கிழமை மாலை தொடங்கியே - மழையும் காற்றும் கடுமையாகத் தான் இருந்தன. இடைவிடாத மழை. இடை விடாத காற்று.

இரவு பதினொரு மணிக்குமேல் .ெ பரி தாக வளர்ந்துவிட்டது. ஊழிக் காற்று : படீல், படீல், L/to.60.

வீடுகள் இடிந்து விழுகின்றன : மரங்கள் சாய் கின்றன ; காந்த விளக்குக் கம்பி அறுந்து போகிறது. நான்கு சு வ ர் க ளு ம் மேலே விழுந்துவிடும் போலிருந்தன ; நல்ல கோட்டை போன்ற வீட்டிலே இருந்தேன். இருந்தாலும் சத்தம் பொறுக்க முடிய வில்லை ஊழிக் காற்று. மருத்துக்களின் களியாட்டம், பேரச்சம்.

பா. த.-15