பக்கம்:பாரதித் தமிழ்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

232 பாரதி தமிழ்

குளித்துவிட்டுக்கூடியவரை சுருதியும்லயமும் தவ்ருத படி ஸ்ரளி வரிசை முதலியன பழகவேண்டும். உச்ச ஸ்தாயிதான் எப்போதும் நல்லது. உடம்பை நிமிர்த்து முகத்தை நேரே நிறுத்தி முகத்திலும் வாயிலும் கோணல் திருகலில்லாதபடி வாயை ஆவென்று சிங்கம் போலே திறந்து பாடவேண்டும். தொண்டையிலே கரகரப்பிருந்தால் வெறு மிளகைத் தின்னவேண்டும். கற்கண்டு சேர்ப்பது நல்ல தில்லை.

பாட்டுக் கச்சேரி நடத்தும்போது, நடுவிலே மற்ற வாத்தியக்காரரை வாசிக்கச் சொல்லிவிட்டுப் பாடகர் வெறுமே இருப்பதும், தெம்மாங்கு முதலான வேடிக்கைப் பாட்டுக்கள் பாடுவதும் தமக்கு ரஸப்படவில்லை யென்று பூரீநிவாசய்யங் கார் சொல்லுகிறார். அதை நான் ஒரு பகுதி ஆrே பிக்கிறேன். வீணை, குழல் முதலிய் இன்சக் கருவி களும் மத்தளம் முதலிய தாளக் கருவி களும் வாய்ப்பாட்டின் உதவியில்லாமல் தனியே இன்பந் தருகின்றன.

வாத்யம் எட்டாத ஸ்வரத்தைத் தொடப் போய்க் கஷ்டப்படாது. தொண்டையிலே கரகரப் பும், அடைப்பும் இருக்கும்போது கச்சேரி நடத்த வராது. சரியானபடி சுருதி சேர்ந்த பிறகுதான் தொழில் செய்யத் தொடங்கும்.

வீணையும் குழலும் பறயுைம் வாய்ப்பாட்டில்லா மல் தனியே ஒலிப்பது பழைய நாளிலும் உண்டு. கண்ணன் குழலுக்கு இடைப் பெண் ஒத்துப் பாடி யது முண்டு. எம்பெருமான் தனியே இசைப்பது முண்டு. தெம்மாங்கு முதலியன ஹாஸ்ய ரசத்தை உடையவை. அவற்றை முழுதும் நிறுத்திவிடக் கூடாது. ஆனல் ஒரே மெட்டை வளைத்து வளைத் துப் போன இடமெல்லாம் சொல்லிப் பயனில்லை