பக்கம்:பாரதித் தமிழ்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பாரதி தமிழ்

யாக்கி வைத்திருப்பவனை ஞானியாகக் கொள்ள லாகாது. ஆத்மாவுக்கு உடம்பே முதலாவது சீடன். 7. கார்லைல் என்ற ஆங்கிலேய ஆசிரியர் :சந்தேகம், விசனம், மனச்சோர்வு, கோபம், ஏக்கம், இந்தப் பிசாசுகளெல்லாம் மனிதனை அடிக்கும் பொருட்டுப் பதுங்கி நிற்கின்றன. அவன் சோம்ப லுக்கிடங்கொடுக்கும் போது இவையெல்லாம் அவனை வந்து தாக்குகின்றன. தீவிரமாக உடம்பை உழைப்பதே இந்தப் பிசாசுகள் அடிக்காமல் தன் னைக் காத்துக் கொள்ளுவதற்கு நிச்சயமான வழி. தொழிலைக் கைக்கொண்டால், பிறகு எந்தப் பிசாசும் பக்கத்தில் நெருங்காது. மிஞ்சி வந்தால், தூரத்திலிருந்து உறுமும். அவ்வளவுதான்.

8. மோந் தாஞ் என்ற ப்ரான்ஸ் தேசத்துப் பண்டிதர் .--சோம்பலை நரகவாதனைகளில் ஒன்றா கக் கணக்கிடவேண்டும். அதைச் சிலர் சொர்க்க இன்பங்களில் ஒன்றாக நினைக்கிறார்கள்.

9. நபி ஸஅலேமான் : சோம்பேறியே, எறும் பினிடம் போ. அதன் நெறிகளைப் பார். உனக்

குப் புத்தி வரும்.

II

விளக்கம் காளிதாஸன்

மேலே மொழிபெயர்த்திருக்கிற வசனங்களில் தொழிலில்லாதவனுக்கு ஆத்ம ஞானமில்லையென்று தோரோ (6) சொல்லுகிரு.ர். ஆத்மாவுக்கு முதலா வது சிஷ்யன் சரீரமென்பது அவர் கொள்கை, ஆத்ம ஞானி சோம்பேறியாக இருக்கமாட்டானென்ற இவருடைய கொள்கை பகவத்கீதையின் கருத்துக்கு