பக்கம்:பாரதித் தமிழ்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடற் பாலத்தில் வர்ணசிரம சபை 253

நான் சொன்னேன் :

ஸ்வாமி, நான் காலையில் காபி குடித்துவிட்டுத் தான் வீட்டிலிருந்து புறப்பட்டேன். எனக்கு இங்கே சிறிது நேரம் தனியே யிருப்பதில் பிரிய முண்டாகிறது. நீர் அவஸரமானல் வீட்டுக்குப் போம். நான் கொஞ்சம் இங்கே இருந்துவிட்டு வருகிறேன்” என்றேன்.

அப்போது சேஷய்யங்கார் புன்சிரிப்புடனே, “நான் ஆஹாரமில்லாமல் வெளியே புறப்படும் வழக்கம் எப்போதுமே கிடையாது. எனக்கும் பசியில்லை. ஆதலால், நானும் இங்கேயே உம்மோடு சிறிது நேரம் பொழுது போக்கத் தயாராக இருக் கிறேன். இந்த இடத்தில் ஒரு சபை கூடிப் பேசி ஞல் மிகவும் நன்றாக இருக்கும். என்ன செய்யலாம்? அந்தச் செம்படவன் பேச வரமாட்டான். அவன் மீன் கிடைக்கவில்லை யென்று என் மேலே கோபித் குக் கொள்ளுகிருன். நீரோ பத்திரிகையிலுள்ள அண்டப் புளுகுகளையெல்லாம், வேத வுண்மை போலே கருதி, மஹா சிரத்தையுடன், நுழைந்து நுழைந்து வாசித்துக் கொண்டிருக்கிறீர். விடுங் காணும்! பத்திரிகையை அப்பாலே போடும். காற்று மிகவும் ரஸமாக வீசுகிறது. எனக்கு இந்த இடத்தை விட்டுப் போக மனதாகவில்லை. ஏதாவது பேச்செடும்’ என்று சொன்னர்.

விதியே சேஷய்யங்கார் ரூபமாக வந்து நம்மைப் பேச்சுக்கிழுக்கிற தென்பதை நான் தெரிந்து கொண்டு பின்வருமாறு சொல்லலானேன் :

“ஸ்வாe, என்னல் வஞ்சனையில்லை. சபை

போடுவோம். அதைப்பற்றி யாதொரு ஆக்ஷேபமு மில்லை. ஆளுல் உபந்யாஸ் மெல்லாம் நீர்தான்