பக்கம்:பாரதித் தமிழ்.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


284 பாரதி தமிழ்

அவர் சாகுமுன்னே ஹிந்துஸ்தானம் பிழைத்து விட்டது. ஹந்துக்களுடைய சக்தி ஏறுவதைக் கண்ணுலே பார்த்த பிறகுதான் அந்தக் கிழவன ருடைய பிராணன் பிரிந்தது. ஹிந்துக்களுக்கு இந் தியாவில் அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று 70 வருவுங்களுக்கு மு ன் ேன தாதாபாய் நெளரோஜி கண்டுபிடித்தார். 11 வருஷங்களுக்கு முன்னே கல்கத்தா காங்கிரஸ் சபையில் ஹிந்துக் களுக்கு ஸ்வராஜ்யம் வேண்டும் என்று தாதாபாய் முரசடித்தார். இந்தியா முழுவதும் அந்த வார்த்தை பரவி அசைக்க முடியாமல் நிலைபெற்றதைக் கண்ட பின் உயிர் துறந்தார். 1905-ம் வருஷத்தில் சென் னப்பட்டணத்தில் சுதேசமித்திரன் ஜி. சுப்ரமணிய அய்யர் என்னிடம் ஒரு நாள் தாதாபாய் நெளரோ ஜியின் 80-வது பிறந்த நாள் விசேஷம் கொண்டாட வேண்டும் என்று சொன்னர். பார்லிமெண்ட் சபைக்கும், மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மூச்சு விடாமல் விண்ணப்பம் எழுதி தாதாபாய் ஒரு பயனும் அறியாமல் கிழத் தன்மை முற்றிக் கிடக்கிறார். இவருக்குப் பிறந்த நாள் கொண்டாடி நாம் என்ன பயன் பெறப் போகிருேம்?” என்று கேட்டேன்.

அப்போது ஜி. சுப்ரமண்ய அய்யர் சொன்னர்:

“தாதாபாய் உறுதியுடைய மனிதன். அவர் நினைத்த காரியங்கள் கடைசிவரை ஈடேறத்தான் செய்யும். ஹிந்து ஜனங்கள் பசிபாலும் பிணி யாலும் அழிந்து போகாமல் காக்கவேண்டும் என் றும் அதற்கு ஆங்கிலேயேர் நமக்குத் தன்னாட்சி கொடுப்பதே உபாயம் என்றும் தாதாபாய் நெளரோஜி சொல்லிக் கொடுத்தார். நமக்கெல்லாம் தேச பக்தி அவர் கொடுத்த பிச்சை. அவரை நாம் ஆசார்யராகக் கொண்டாட வேண்டும்” என்று சொன்னர்.