பக்கம்:பாரதித் தமிழ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பாரதி தமிழ்

கிரஸ் சபைக்குப் போன மாத்திரத்திலேயே ஒரு வன் மதிப்புக்கிடமாக மாட்டான். தெய்வ பக்தியை

லபலமாகக் கொண்டதஞலேயே தாதாபாய் கார்யளித்தி பெற்றார். ஆதலால் பக்தியே தாரகம். ஒவ்வொருவனும் தெய்வ பக்தி பண்ணலாம். வியா பாரி, தச்சன், அம்பட்டன், ராஜா, மந்திரி, பிரா மணன், பறையன் எல்லோரும் தெய்வபக்தியாலே மேன்மை பெறுவார். எந்தத் தொழிலும் தெய்வ பக்தியால் வெற்றி யடையும். தாதாதபாயினுடைய பூதசரீரத்திலிருந்த சக்தியைக் காட்டிலும் ஆயிர மடங்கு அதிக சக்தி அவருடைய நாமத்தில் புகுந்து, அப்பெயர் நினைப்பினலே ஹிந்து ஜாதி மேன்மை பெறும்படி நேரிடலாம். பராசக்தியின் இஷ்டப்படி உலகம் அசைகிறது. பாரசக்தி இப் போது நம்பிக்கையை உலகம் முழுதும் பரப்பு கிருள். சில தினங்களின் முன்பு ஒரு இங்கிலீஷ் சாஸ்திரி கடவுளைப்பற்றி எழுதி யிருக்கும் புஸ்தக மொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். சரணு கத தர்மத்தை அந்த நூல், நமது விசிஷ்டாத்வைதி களைப்போல் அத்தனை தெளிவாகச் சொல்லுகிறது. ஹிந்து மதம் உலக முழுமையும் வியாபித்துக் கொண்டு வருகிறது.

நம்பிக்கையின் ஸஹஸ்ரநாமங்களில் தாதா பாய் நெளரோஜி என்பதொன்று. நம்பிக்கை வெற்றி பெறும். நம்பிக்கை நீடுழி வாழ்க.

குறிப்பு : தாதாபாய் நெளரோஜி 30-6-1917-ல் கால மாளுர்,

அவரைப் புகழ்ந்து அவருடைய எண்பதாவது ஆண்டு நிறைவுக் காலத்தில் ப்ாரதியார் தாதாபாய் நவு:ோஜி என்ற பாடல் பாடியிருக்கிரு.ர். அப்பர்டல் முதல் தொகுதியில் வெளியாகியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/285&oldid=605632" இலிருந்து மீள்விக்கப்பட்டது