பக்கம்:பாரதித் தமிழ்.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


க்ண்கள் 291

வதுண்டு. அது நல்ல பழக்கம். ஸ அர்யனேயே பார்த்துக் கொண்டிருந்தால் ஞானதிருஷ்டி உண் டாகும். கண்ணில் வீரம் ஏற்படும்.

ஸ்ாதாரணமாக இருவருடைய கண்கள் ஸ்ந்தித் தால், “இவன் ஏனடா நம்மை முறைச்சுப் பார்க் கிருன்?’ என்கிற எண்ணம் இருவர் மனசிலும் உண்டாகிறது; ஒருவன் கண்ணேச் சாய்த்துக் கொள்ளுகிருன். அல்லது இருவரும் சாய்த்துக் கொள்ளுகிரு.ர்கள். நேருக்கு நேர் கண்ணுக்குக்கண் பார்த்து இரண்டு பேர் நெடுநேரம் பேசிக் கொண் டிருப்பது துர்லபம்.

பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும்!

கவனி!

பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.

பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.

கவனி!

பொய் தீர்ந்தால் பயம் தீரும்.

பயம் தீர்ந்தால் பொய் தீரும்.

நேரே பார்த்தால் விரோதக் குறியென்று யோக்யன் ஏன் நினைக்க வேணும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உன் மனசில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளும் பொருட் டாக உன் கண்ணை நேரே பார்க்கிறேன். விரோத மில்லை. அவமரியாதை யில்லை. விஷயம் தெரிந்து கொள்ளும் பொருட்டு.

பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள் முழு தும் ஸஅர்யனை இடைவிடாமல் பார்த்து உபாசனை செய்தாராம். இது நல்ல வழக்கம். கண் இருக்கும் போது ஸ அர்ய நமஸ்காரம் செய்வோம்; அதளுல் ஞான திருஷ்டி யேற்படும்: