பக்கம்:பாரதித் தமிழ்.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள்

காளிதாஸன்

25 அக்டோபர் 1917

ஐரோப்பாவில் பல தேசங்களில் சண்டையினுல் ஆள் மிகவும் சேதப்படுவதிலிருந்து அங்கே பல பண்டிதர் இனி வரப்போகும் ஜனத்தொகையாகிய குழந்தைகளே நேரே பாதுகாக்கும் விஷயத்தில் அதிக சிரத்தை பாராட்டி வருகிறார்கள். மேல் வகுப்புக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவு கீழ் ஜாதிக் குழந்தைகளுக்கு அங்கே படிப்பு இதுவரை கற்றுக் கொடுக்கவில்லை. கீழ் வகுப்புக் குழந்தைகளை அதிபால்யத்திலே தொழிற்சாலை களுக்கு அனுப்பி வேலை செய்யச் சொல்லி வருவ தால் அவர்களுடைய அறிவு விசாலமடைய யாதொரு வழியுமில்லாமற் போகிறது.

யந்திரத் தொழிற்சாலைகள் மனிதரை மிருகங் களுக்கு ஸ்மானமாகச் செய்து விடுகின்றன. கமலை முதல் மாலை வரை ஒருவன் ஒரு மனையின் மேலிருந்து கொண்டு, நரக வாதனை போன்ற தீராத யந்திரச் சத்தத்தினிடையே, யந்திரத்துக்குள் கொஞ்சங் கொஞ்சமாகப் பஞ்சை நுழைத்துக் கொண்டிருந்து விட்டு, ஸாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் குடித்து மதிமயங்கிக் கிடந்து, மறுநாள்