பக்கம்:பாரதித் தமிழ்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழங்தைகள் 293

காலை பொழுது விடியுமுன்னே மறுபடி பஞ்சு போடப் போய்விடுகிருன். இவன் தன்னுடைய அறிவை விசாலப்படுத்தவும், உலக இன்பங்களே அநுபவிக்கவும், தியானம் பூஜை முதலிய தெய்வக் காரியங்கள் செய்யும் நேரமெங்கே?

எப்போதும் இடைவிடாமல், அவன் காதில் யந்திரத்தின் பேய்க் கூச்சலும், கண்முன் இரும்பும் பஞ்சும் மாருமல் இருப்பதால் அந்த மனிதன் நாளடைவில் மனிதத் தன்மை மாறித் தான் ஒரு இரும்பு யந்திரம் போலாய் விடுகிருன். இந்தத் தொழிலுக்குச் சிறு குழந்தைகளைக் கொண்டு விட்டால் அவற்றின் கதி என்னுகும்?

இங்ஙனம் பாழடைந்து குட்டிச்சுவராய்ப் போகும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென் றும், மேல் ஜாதிக் குழந்தைகளைப் போலே கீழ் ஜாதிக் குழந்தைகளுக்கும் தக்க வயதாகும் வரை படிப்பும் நாகரிகமும் கற்றுக் கொடுத்துத் தொழிற் சாலைகளில் சேராமல் தடுக்க வேண்டுமென்றும் மேற்குத் திசையாரில் பல பண்டிதர் முயற்சி செய்து வருகிரு.ர்கள்; படிப்பாளிகளில் அநேகர் இந்த யுத் தத்தில் மடிந்து போவதால், சண்டை முடிந்த பிறகு ஐரோப்பாவில் கல்வியின் நிலைமை மிகவும் சீர்கெட் டுப் போயிருக்குமென்பதில் ஸந்தேகமில்லை. இது நிற்க.

நமது தேசத்தில் எல்லாருக்கும் ஆரம்பப் படிப்பு ஸர்க்கார் செலவில் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று பூரீ கோகலே வைஸ்ராய் சபையில் கூகூ என்று கத்திப் பார்த்தார். செலவுக்குப் பணம் இல்லை என்று சொல்லி அதிகாரிகள் கையை விரித்து விட்டார்கள். இது சண்டைக்கு முந்தி! இப்ப்ோதோ கேட்கவே வேண்டியதில்லை. இனி மேல் ப்ோகப் போகச் சண்டைச் செலவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/292&oldid=605643" இலிருந்து மீள்விக்கப்பட்டது