பக்கம்:பாரதித் தமிழ்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளருத்த விளக்கம

காளிதாஸன்

26 அக்டோபர் 19 17

1. உச்சரி-சொல். உச்சரி என்பதை உத்-சரி என்று பிரித்தால் மேலே (உயர்ந்த படியில் நட) என்று பொருள் படுகிறது. சொல்லும்போது மேல் நிலையில் நின்று சொல்க.

2. ‘கை’ என்பதற்குத் தெலுங்கில் செய்’ என்று பெயர். க, ச மாறுதல் இயல்பு. ‘கை’ என்ற சொல்லுக்கே செய் என்று பொருள். தொழில் செய்யாமல் இருக்கும் கையை நெருப்பிலே வை: கரியாவது கிடைக்கும் என்றர்த்தம்.

3. காக்கை ஒரு பறவையின் பெயர். காக்கை என்றால் காப்பாற்றுதல் என்றும் அர்த்தம். தெருவில் நாம் பண்ணுகிற அசுத்தங் களை யோசிக்கும் போது காக்கை யில்லாமல், .ே பா ன ல் நாமெல்லோரும் நாற்றமெடுத்துச் செத்துப்போவ்ோம் என்பதில் சந்தேகமில்லை.

காக்கைகள் பிதிர்க்களுடைய வாஹனங்கள் என்றும் அவற்றுக்கு சிராத்தாதி ஸமயங்களிலும், தினந்தோறும், வாயஸ்ாந்தம் போடவேண்டும் என்றும் நமது முன்ைேர் சொல்லி யிருக்கிறார்கள்,