பக்கம்:பாரதித் தமிழ்.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பரலி சு. நெல்லையப்பருக்குக் கடிதம்

21 டிசம்பர் 19 18

ஓம் சக்தி

கடையம்

21 டிசம்பர் 1918. பூரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு நமஸ்காரம். நான் லெளக்யமாகக் கடையத்துக்கு வந்து சேர்ந்தேன். இவ்வூருக்கு நான் வந்த மறுநாள் பாப்பா பாட்டு, முரசு, நாட்டுப் பாட்டு, கண்ணன் பாட்டு இவை வேண்டுமென்று பலரிடமிருந்து கடிதங்கள் கிடைத்தன.

என் வசம் மேற்படி புஸ்தகங்கள் இல்லை. உன்னிடம் மேற்படி புஸ்கங்களிருந்தால் அனுப்பக் கூடிய தொகை முழுதும் அனுப்பும்படி ப்ராத்திக் கிறேன்.

“பாஞ்சாலி சபதம்’-இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒன்றாக அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எது வரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம்வரை நான் ப்ரசுரம் செய் யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக்