பக்கம்:பாரதித் தமிழ்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பாரதி தமிழ்

திலோர்த்தமை, ரம்பை யெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்க வேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தாமணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஜூலம் சொட்டுகிறது. காந்தாமணி, காந்தாமணி, என்ன நேர்த்தியான நாமம். ரஸ்ம் ஒழுகுகிறது........ 3 y

இங்ஙனம் ஸுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக்கொண்டு போவதை நான் இடையே மறித்து :- மேலே ந ட ந் த சரித்திரத்தைச் சொல்லும்’ என்றேன்.

“அந்தக் காந்தாமணியைக் காணவில்லை யென்று விடியற்காலமெல்லாம் தேடிக் கொண்டி ருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்தி லிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 3 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலை யாளிப் பையனும் கிறிஸ்துவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்’ என்றார்.

சில தினங்களுக்கப்பால் மற்றாெரு ஆச்சர்யம் நடந்தது. கிராமத்து மாஜி போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தலாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங் கரையில் அவருடைய காதற் பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஒடிப் போய் விட்டார்ர்கள். பின்னிட்டு அந்தக் கிழவி தலை வளர்த்துக்கொண்டு விட்டாளென்றும் பார்த்தஸ்ாரதி ஐயங்காரும் அவளும் புருஷனும் பெண் ஜாதியுமாக வாழ்கிறார்களென்றும் அய்யங் கார் அங்கொரு நாட்டுக்கோட்டை செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக்கொண்டு rேமமாக வாழ்கிருரென்றும் ரங்கூனிலிருந்து செய்தி கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/337&oldid=605713" இலிருந்து மீள்விக்கப்பட்டது